பிரித்தானியாவில் இளம்பெண் கொலையில் மர்மம் விலகியது: இந்தியர் கைது

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் நீண்ட மூன்று மாத விசாரணைக்கு பின்னர் இளம்பெண் கொலையில் அவரது கணவரை பெருநகர பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்திய வம்சாவளி தொழில்முனைவரான Gurpreet Singh(42) புதனன்று மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த கொலைச் சம்பவமானது உள்ளூர் சமூகத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனவும் இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட Sarbjit Kaur(38)-ன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவ தயாராக இர்ப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிரவரி 16 ஆம் திகதி தமது குடியிருப்பில் சுயநினைவை இழந்த நிலையில் Sarbjit Kaur மீட்க்கப்பட்டார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூறு சோதனையில் அவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளது தெரிய வந்தது.

ஆனால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.

இதனிடையே கவுரை கடைசியாக சந்தித்த நபர் அவரது கணவர் Gurpreet Singh என விசாரணையில் பொலிசாருக்கு தெரியவந்தது.

இந்த நிலையிலேயே Gurpreet Singh மேற்கு மிட்லாண்ட்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...