பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தேனிலவுக்கு எங்கு செல்கிறார்கள் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி 600 விருந்தினர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெறவிருக்கிறது.

திருமண நாள் நெருங்கிகொண்டிருப்பதால் இவர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது ஊடங்களில் தலைப்பு செய்தியாக வெளியான வண்ணம் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் தேனிலவு செல்லும் இடம் அரச குடும்பத்தால் தெரிவிக்கப்படாவிட்டாலும், இவர்கள் தேனிலவு செல்லும் இடத்தின் பெயரை travelandleisure எனும் தளம் வெளியிட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க நாடான Namibia-யாவுக்கு இவர்கள் தேனிலவு செல்லவிருக்கிறார்கள். Kaokoland - வில் உள்ள Hoanib Valley Camp- இல் இவர்கள் தங்கவிருக்கிறார்கள்.

வடமேற்கு நமீபியா மலைகளால் சூழப்பட்டுள்ளது, மணல் குன்றுகள் மற்றும் பாலைவனம் நிறைந்த பெரிய பகுதிகள் உள்ளதால், இது தேனிலவு ஜோடிகளுக்கு சிறந்த இடம் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers