குட்டி இளவரசி குறித்த ருசிகர தகவல்: விழா கோலத்தில் கென்சிங்டன் அரண்மனை

Report Print Trinity in பிரித்தானியா

தனது சகோதரர் பிரின்ஸ் லூயிஸ்சை வரவேற்ற ஒரு வாரத்தில் தனது மூன்றாவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் இளவரசி சார்லட்.

கென்சிங்டன் அரண்மனையின் கவனத்தை குட்டி இளவரசர் லூயிஸ் ஆர்தர் ஈர்த்திருப்பது உண்மையென்றாலும் இன்றைய தினம் அவரது சகோதரி குட்டி இளவரசி சார்லட்டுக்கானது.

இவரது பிறந்த நாளை ஒட்டியும் புதிய இளவரசரான லூயிஸை பார்க்கும் பொருட்டும் ராணி ஹெலிகாப்டர் மூலம் கென்சிங்டன் அரண்மனைக்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

குட்டி இளவரசிக்கு வாழ்த்து தெரிவித்த அனைவரையும் சந்தோஷப்படுத்தும் வகையில் அவரது நர்சரி பள்ளியின் முதல் நாளன்று எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை போட்டு "அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி" என்று கென்சிங்டன் அரண்மனை ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாரம்பரிய அரண்மனை விசுவாசிகள் சார்லட்டின் தற்போதைய பிறந்த நாள் புகைப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

சார்லோட்டின் முதல் மற்றும் இரண்டாவது பிறந்த நாள் புகைப்படங்கள் கேம்பிரிட்ஜ் டச்சஸ் என்பவரால் எடுக்கப்பட்டன. அவர் இளவரசி சார்லட்டை அழகிய ஓவியம் போல தனது புகைப்படங்களில் சித்தரிக்க தயங்குவதேயில்லை.

அதிகம் வெளியே வராத இளவரசி சார்லட் ராஜ பரம்பரையின் மரபணுவில் ஊறிய தன்னம்பிக்கைகளை வெளிக்காட்டுவதில் வல்லவராகவே இருப்பதாக பத்திரிகைகள் மற்றும் பொது மக்கள் கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் மருத்துவமனையில் தனது புதிய சகோதரரை பார்ப்பதற்காக வந்த இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் ஜார்ஜ் ஆகிய இருவரில் கூச்சங்களுடன் ஜார்ஜ் தலைகுனிந்து கொள்ள பத்திரிகையாளர்களை பார்த்து தன்னம்பிக்கையுடன் குட்டி இளவரசி சார்லட் கையசைத்த விதம் உலகமெங்கும் வைரலானது.

அது மட்டுமன்றி அவரது வெளிநாட்டு பயணத்தின் போதும் அவர் இதே போன்ற ராஜ குடும்பத்திற்கே உரித்தான கம்பீரத்தோடு அவரது செயல்கள் இருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

தற்போது கென்சிங்டன் அரண்மனையில் தனது மூன்றாவது பிறந்த நாளை சார்லட் கொண்டாடுவார் எனத் தெரிய வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers