மனைவியுடன் விவாகரத்து ஆன சில மணிநேரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலதிபர் தாய்லாந்தில் வசித்து வந்த நிலையில் மனைவியை விவாகரத்து செய்த சில மணி நேரங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஜான் தாம்ஸ் (68) என்ற தொழிலதிபர் தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் வசித்து வந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை மனைவியுடன் அவருக்கு விவாகரத்து ஆனது.

ஜானின் மனைவி வேறு நபருடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் தனது பெண் தோழியுடன் ஜான் தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார்.

இதையடுத்து அவர் வசித்த 18-வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்.

கீழ்தளத்தில் இருந்த நீச்சல்குளம் அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜானின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

பொலிசார் கூறுகையில், ஜானின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை, இது தற்கொலை என்றே கருதுகிறோம்.

அவர் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

ஜானின் இறப்பு குறித்து பிரித்தானிய தூதரகத்துக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

ஜானின் பெண் தோழி கூறுகையில், அவர் அதிகமாக பால்கனியில் தான் உட்காருவார், இன்று நீதிமன்றத்துக்கு அவர் விவாகரத்து சம்மந்தமாக சென்றுவிட்டு வந்தோம்.

சில தினங்களாக அதிக நேரம் பால்கனியில் அவர் உட்கார்ந்திருந்தால் ஏதோ சரியில்லை என மனதுக்கு தோன்றியது, அதன்படியே நடந்துவிட்டது.

அவர் இப்படி செய்தார் என என்னால் நம்ப முடியவில்லை, அவருடன் இன்னும் அதிக நேரம் செலவிடுவேன் என நினைத்திருந்தேன் என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers