பிரித்தானியாவின் மிகவும் மாசுபட்ட இடம் எது தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவின் மிகவும் மாசுபட்ட இடம் குறித்த தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2018-ல் வேல்ஸின் Port Talbot நகரம் மிகவும் மாசுபட்ட நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது.

உலகில் அதிகளவில் இரும்பு சம்மந்தான தொழில்கள் மற்றும் பணிகள் நடைபெறும் நகரங்களில் ஒன்றாக Port Talbot உள்ளது முக்கிய விடயமாகும்.

பிரித்தானியாவில் உள்ள 47 நகரங்களில் காற்று மாசுபாட்டின் அளவு வரம்பை விட அதிகமாக மாசு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Port Talbot-ல் கடந்த 2015-லிருந்து பதிவு செய்யப்பட்ட தரவுகளில் கன மீட்டர் ஒன்றுக்கு 18 மைக்ரோகிராம்கள் பதிவு செய்யப்பட்டன.

Credit: Getty

அதே போல உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 10 மைக்ரோகிராம்கள் என்ற அளவை விட லண்டன், மான்செஸ்டர், லிவர்புல், நோட்டிங்கம் ஆகிய முக்கிய நகரங்களில் அதிகளவு மைக்ரோகிராம்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

Scunthorpe மற்றும் Salford நகரங்கள் 15 மைக்ரோகிராம்கள் என்ற அளவுடன் இரண்டாமிடத்திலும், Gibraltar மற்றும் Thurrock நகரங்கள் 14 மைக்ரோகிராம்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள 10 மைக்ரோகிராம்கள் என்ற அளவில் Birmingham, Brighton, Bristol,Newcastle, Portsmouth மற்றும் Southampton ஆகிய நகரங்கள் உள்ளன.

Credit: Getty
Credit: Getty

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...