பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கட்டளையிட்ட மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது திருமணத்திற்காக உடலை இளைத்து ஸ்லிம்மாக தினமும் உடற்பயிற்சி மையத்துக்கு செல்கிறார்.

இது, ஹரிக்கு அவரது வருங்கால மனைவி மெர்க்கல் இட்ட அன்பு கட்டளை ஆகும். காய்கறி உணவுகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் மெர்க்கல், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்.

முறையான உணவுபழக்கவழக்கம், போதிய உடற்பயிற்றி மட்டுமல்லாமல் மெர்க்கல் யோகா கற்றுக்கொண்டவரும் ஆவார். இவை அனைத்தையும் தனது வருங்கால கணவர் ஹரியும் கடைபிடிக்க வேண்டும் என அன்பு கட்டளையிட்டுள்ளார்.

தொப்பையுடன் சற்றே எடைபோட்டிருந்த ஹரி உடற்பயிற்சி மையத்துக்கு சென்று வருகிறார். Chelsea - வில் உள்ள KX Gym மிகவும் பிரபலம்.

இங்கு ஒரு வருடத்திற்கு, 8,000 பவுண்ட்ஸ் வசூலிக்கப்படுகிறது. காலை 7 மணிக்கே உடற்பயிற்சி மையத்துக்கு இளவரசர் ஹரி சென்றுவிடுகிறார்.

மெர்க்கலின் காலை உணவு, ஓட்ஸ், வாழைப்பழம் மற்றும் நீலக்கற்றாழை மற்றும் முட்டை வெள்ளை கருவில் ஆம்லெட் ஆகியவை ஆகும்.

மதிய உணவாக கடல் உணவு மற்றும் காய்கறி சாலட்டுகள். இரவில் பாஸ்தா. சிற்றுண்டியாக ஆப்பிள் மற்றும் நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்வார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers