GobackModi! லண்டனில் மோடிக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

Report Print Kabilan in பிரித்தானியா

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனிலும் GoBackModi என்ற வாசகத்துடன் போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு பிரித்தானியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

இதன்போது பிரித்தானியா பிரதமர் தெரேசா மேவை சந்தித்தார், இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் Gobackmodi என்ற பதாகையுடன் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதுதவிர காஷ்மீரின் கத்துவா சிறுமி வன்கொடுமை சம்பவம் உட்பட பாலியல் ரீதியான தாக்குதல் அதிகரித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

Modi Go Home என எழுதப்பட்டிருந்த பதாகைகளுடன் Downing Street மற்றும் நாடாளுமன்றத்துக்கு வெளியே இப்போராட்டம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், #Gobackmodi என்ற ஹேஷ்டேக் உலகம் முழுவதும் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Reuters

Reuters

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers