அமெரிக்க கூட்டுப் படைகளுடன் இணைந்து பிரித்தானியா தாக்குதல் நடத்தியது ஏன்? கொந்தளிக்கும் மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பாராளுமன்றம் முன்பு திரண்ட மக்கள் அமெரிக்க கூட்டு படைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடத்தியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிரியாவில் உள்ள அப்பாவி மக்கள் மீது சிரிய அரசுப்படையினர் கடந்த 7-ஆம் திகதி நடத்திய இரசாயன தாக்குலில் 75-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்தனர்.

இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் அமெரிக்க படையினருடன் இணைந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சிரியாவில் உள்ள இரசாய குடோனில் குண்டு மழை பொழிந்தன.

இந்நிலையில் லண்டனின் Westminster பகுதியில் அமைந்திருக்கும் பாராளுமன்றத்தின் முன்பு ஏராளமான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் போரை நிறுத்து, சிரியா ஜனாதிபதி நல்ல மனிதர், அமெரிக்க படைகளுடன் இணைந்து பிரித்தானியா ஏன் தாக்குதல் நடத்தியது? தெரசா மே- ஏன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்? என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், சிரியா ஜனாதிபதி நல்லவர் எனவும் ,அவர் ஒரு மருத்துவர் அவர் இரசாயன தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை எனவும், அமெரிக்க கூட்டுப் படைகளுடன் இணைந்து பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் நடத்திய தாக்குதலில் பலர் இறந்திருப்பதாகவும் ஆனால் அதைப் பற்றி எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஒரு நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றால் பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பிகளிடம் ஓட்டெடுப்பு எடுக்க வேண்டும். ஏன் அவர் எடுக்க வில்லை, சுயநல முடிவு பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மேலும் தெரசா மே-வின் இந்த அதிரடி உத்தரவிற்கு எதிர் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனெனில் ஒரு தாக்குதல் நடத்தப் போகிறோம் என்றால் பாராளுமன்றத்தில் எம்.பிக்களின் ஓட்டை கணக்கெடுக்க வேண்டும்.

ஆனால் அவரோ அதை எல்லாம் செய்யாமல் திடீரென்று உத்தரவை கொடுத்துவிட்டார். ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு முன் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதை எல்லாம் தெரசா மே மீறிவிட்டதாக பாராளுமன்ற கூட்டத்தில் எம்.பிக்கள் சிலர் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...