நச்சு வாயுத்தாக்குதல்! பிரித்தானியாவே காரணம்: ஆதாரத்துடன் ரஷ்யா

Report Print Balamanuvelan in பிரித்தானியா
351Shares
351Shares
ibctamil.com

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட நச்சு வாயுத்தாக்குதலுக்கு பிரித்தானியாவே காரணம் என ரஷ்யா ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன், முன்னாள் உளவாளி செர்கெய் மற்றும் அவரது மகள் யூலியா மீது நச்சு வாயுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு ரஷ்யாவே காரணம் என பிரித்தானியா குற்றம்சாட்டிய நிலையில், பல்வேறு நாடுகளும் அந்நாட்டு தூதர்களை வெளியேற்றின.

இந்நிலையில் தன்மீதான குற்றச்சாட்டை, சில ஆதாரங்களுடன் ரஷ்யா மறுத்துள்ளது.

தாக்குதலில் பயன்படுத்திய நச்சு ரசாயனம் BZ ஆனது பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமே தயாரித்து பயன்படுத்துகின்றன என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அதிகாரி Sergey Lavrov கூறியுள்ளார்.

இதற்காக சுவிட்சர்லாந்தின் Speiz lab-ன் (மார்ச் 27) அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளார்.

சாலிஸ்பரி தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களின் மாதிரிகளில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் NATO நாடுகளால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் BZ எனப்படும் 3-Quinuclidinyl belzilate என்னும் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் ரசாயானப் பொருள் இருந்ததாகவும், அதை ரஷ்யாவோ அல்லது சோவியத் ஒன்றியமோ ஒருபோதும் தயாரிப்பதில்லை என்றும் A-234 (நோவிசோக்) சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சுவிஸ் ஆய்வகமான Spiez கண்டறிந்துள்ளது.

  • A-234 (நோவிசோக்) அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்குமானால், அது விரைவில் ஆவியாகக்கூடியது, எனவே அது இரண்டு வாரங்களுக்கெல்லாம் தாக்குப்பிடிக்காது.
  • மேலும் அந்த அளவிற்கு அது Skripalகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் இறந்திருப்பார்கள்.

பரிசோதனையின் முடிவுகளின்படி ரசாயன ஆயுத தடை ஒப்பந்தத்தின்படி இரண்டாம் நிலை ரசாயன ஆயுதங்களுடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்களான BZ மற்றும் அதன் துணை ரசாயனப் பொருட்கள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று Lavrov தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் Spiez ஆய்வகம் தங்களது அறிக்கை நோவிசோக் சேர்க்கப்பட்டதா இல்லையா என்பது சந்தேகமாக உள்ளது என தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளது.

Spiez ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பத்து நாட்களுக்குமுன் தாங்கள் கூறியதையே மீண்டும் கூறுவதாக தெரிவித்துள்ளது, அதாவது Porton Down நோவிசோக் இருப்பதை கண்டுபிடித்ததில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்