பிரெக்சிட்டுக்குமுன் இன்னொருமுறை யோசியுங்கள்: மக்களைக் கோரும் “People's Vote” பிரச்சாரம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
198Shares
198Shares
ibctamil.com

ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் முடிவை மறு பரிசீலனை செய்யும்படி மக்களை யோசிக்க சொல்லும் “People's Vote” என்னும் பிரச்சாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் மற்றும் பெரு வணிகர்கள் இணைந்து முன்வைத்துள்ளனர்.

அவர்கள் இரண்டாவது முறை ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி பிரித்தானியா ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறுவது குறித்து மக்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்துவருகின்றனர்.

“People's Vote” என்னும் அமைப்பு, வடக்கு லண்டனிலுள்ள Camdenஇல் பிரெக்சிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேற்று பேரணி ஒன்றை நடத்தியது.

PA

பெரும்பாலான முன்னணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 1200 பேர் பேரணியில் கலந்து கொண்டதாக அந்த பிரச்சாரத்தின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இன்னொரு பக்கம் பிரெக்சிட் ஆதரவாளர்களும் கூடியிருந்தனர். பேரணியில் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்த X-Men படங்களில் சார்லஸ் ஆக நடித்த நடிகரான Sir Patrick Stewart கூறும்போது, தான் ஒரு அரசியல்வாதியோ தலைவரோ இல்லை என்றாலும், ஐரோப்பிய யூனியனுடன் பிரித்தானியா இணைந்ததை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர்களில் தானும் ஒருவன் என்று கூறினார்.

போர் நடக்கும் ஆண்டுகளில் பிறந்த தான், எதிர்காலம் என்னவென்று தெரியாத சூழலில், பிரித்தானியா ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தபோது தன் காலத்தவருக்கு அது ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.

PA

இப்போது தங்கள் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும்போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தெரிவித்த Sir Patrick Stewart அதனால்தான் தான் இந்த அணியினருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று 51.9% பேர் வாக்களித்த நிலையில் 48.1% பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

பிரித்தானியா 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேற உள்ள நிலையில், பிரித்தானியாவும் ஐரோப்பிய யூனியனும் பிரெக்சிட்டுக்குப்பின் நடக்க உள்ள விடயங்கள் குறித்து ஒரு இறுதி ஒப்பந்தத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

REUTERS

பேரணியில் பங்கு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பிரெக்சிட்டுக்குப்பின் என்ன நடக்கும் என்பது குறித்து யாருக்குமே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்னொருவர் மக்களின் வாக்குக்காக எதையும் செய்யத்தயார் என்று கூறியுள்ளார்.

கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்னா கூறும்போது, பிரித்தானியா நீங்களும் உங்கள் பேரப்பிள்ளைகளும் இப்போது இருப்பதைவிட மோசமான நிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட உள்ளது என்று தெரிவித்தார்.

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில் பிரெக்சிட் ஆதரவாளர்களோ, பொதுமக்கள் யாரும் இரண்டாவது வாக்களிப்பு ஒன்றை விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

AFP

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்