தமிழ் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரித்தானிய போதகர் கைது: என்ன தண்டனை?

Report Print Raju Raju in பிரித்தானியா
595Shares
595Shares
ibctamil.com

பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ஒருவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சின்னம்மாள்புரத்தில் ’கிரேல் டிரஸ்ட்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தை பிரித்தானியாவை சேர்ந்த ஜோனதான் ராபின்சன் (70) நடத்தி வந்தார்.

இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை சென்னை, புதுடெல்லி போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக, ராபின்சன் மீது, ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பொலிஸில் புகார் அளித்தது.

இதையடுத்து பொலிசார் ராபின்சன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் நைசாக பிரித்தானியாவுக்கு தப்பியோடி விட்டார்.

பின்னர் சர்வதேச பொலிஸ் துணையுடன் ராபின்சனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வள்ளியூர் நீதிமன்றத்தில் கடந்த 26.11.2015-ல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் சரணடைந்தார்.

இவ்வழக்கில் தற்போது விசாரணை முடிந்துள்ள நிலையில் ராபின்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்