பிரித்தானியா ரயில் நிலையம் ஒன்றில் இளம்பெண்ணிற்கு நடந்த பயங்கரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா ரயில் நிலையம் ஒன்றில் ஸ்பானிஷ் மொழி பேசிய இளம்பெண்ணின் தலை முடியை கொத்தாக பிடித்து கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்ய உதவும் படி பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.45 மணி அளவில் லிவர்பூல் பகுதியில் இருந்து ஸ்ட்ராட்போர்டுக்கு சென்றுள்ள ரயில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 24 வயது இளம்பெண் தமது தோழிகள் சிலருடன் சம்பவத்தின்போது ஸ்பானிய மொழொயில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இவர்கள் அருகாமையில் இருந்த பிரித்தானிய பெண்கள் இருவர் இதை கேட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் திடீரென்று ஆவேசமான அந்த பிரித்தானிய பெண்கள் இருவரும், இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பேசு எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஸ்பானிய இளம்பெண்ணின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் அவரது தலையில் காயம் பட்டதுடன், முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க அந்த பிரித்தானிய பெண்கள் இருவரும் தாக்குதலை நடத்திவிட்டு அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி மாயமாகியுள்ளனர்.

தற்போது கண்காணிப்பு கெமராக்களை ஆய்வு செய்து வரும் பொலிசார் பொதுமக்களிடம் உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்