பிரித்தானியா பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உடனடியாக பள்ளிகள் மூடல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள முக்கிய பள்ளிக்கூடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளன.

கிழக்கு Yorkshire-ல் உள்ள கிட்டத்தட்ட 12 முதன்மை பள்ளிக்கூடங்களுக்கு அந்நாட்டு நேரப்படி இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தது.

இது புரளி என பள்ளிக்கூட நிர்வாகங்கள் நம்பும் நிலையில் உடனடியாக பாதுகாப்பு கருதி பொலிசாருக்கு தகவல் தந்தனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி ஸ்டுவர்ட் மில்லர் கூறுகையில், இந்த அச்சுறுத்தலானது நம்பகதன்மையற்றது என்பதை பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறோம்.

எல்லாரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளனர்

Gilberdyke Primary பள்ளி, North Newbald Primary பள்ளி, Aldborough Primary பள்ளி,

Hornsea Communtiy Primary பள்ளி, Driffield பள்ளி, Inmans Primary பள்ளி போன்ற முக்கிய பள்ளிக்கூடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்