மனைவிக்கு 1 ரூபாய் கூட கொடுக்காமல் இறந்துபோன கோடீஸ்வரர்: சொத்துக்களை என்ன செய்தார்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானியாவில் வசித்து வந்த 94 வயது கோடீஸ்வரர், தனது மனைவிக்கு ஒரு ரூபாய் கூட சொத்துக்களை கொடுக்காமல் தனது வீட்டில் குடியிருந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.

வேல்ஸ் நாட்டில் வசித்து வந்த Wynford Hodge(94)- Joan Thompson தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். பண்ணை வீடு , கேரவன் பார்க், நிலம் மற்றும் பிற சொத்துக்கள் ஆகியவற்றை சேர்த்து இவரது சொத்து மதிப்பு £1.5million ஆகும்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் Hodge இறந்துபோனார். இவர் இறப்பதற்கு முன்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தனது வீட்டில் குடியிருந்த 2 பேருக்கு எழுதிவைத்துள்ளார்.

தனது மனைவிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தான் இறக்கும் தருவாயில் இருந்தபோது குடியிருப்பாளர்கள் தன்னை அன்புடன் கவனித்து கொண்ட காரணத்தால் இவர் சொத்துக்களை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

தனது கணவனின் சொத்துக்களின் தனக்கு பங்கு வேண்டும் என மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். கேரவனில் வேலை பார்க்கும் எனக்கு மாதம் 1,000 டொலர் பணம் தான் கிடைக்கிறது. இதனை வைத்து என்னால் வாழமுடியவில்லை.

மேலும், எனது குழந்தைகளையும் நான் கவனித்துக்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி கடந்த 12 ஆண்டுகளாக நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே எனது கணவனின் சொத்தில் எனக்கு பங்கு வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும், வீட்டில் குடியிருந்த குடியிருப்பாளர்களும் சொத்தினை கொடுப்பதில் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருவர் இறக்கும்போது யாருக்கு தனது சொத்துக்கள் செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்திருக்கிறாரோ அது அவர்களுக்கு தான் செல்ல வேண்டும்.

ஆனால், மனைவி இருக்கையில் மற்றவர்களுக்கு தனது சொத்துக்களை கணவர் எழுதிவைத்துள்ளார். இருப்பினும் சொத்தில் மனைவிக்கு பங்குகொடுக்க வேண்டியதில் தவறில்லை.

Elidyr Cottage, எஸ்டேட் வருவாயிலிருந்து £30,000 மற்றும் எதிர்கால செலவினங்களுக்கா £160,000 தொகையை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்