பிரித்தானியாவில் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு: ஜெர்மி கார்பின் ஓட்டு எடுக்க வற்புறுத்தல்

Report Print Santhan in பிரித்தானியா
228Shares
228Shares
ibctamil.com

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.

2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.

அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும், 500-க்கும் மேற்பட்டோர் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர் தெரசா மே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் தற்போது நடைபெற்றது.

அதில் மூன்று முக்கிய மந்திரிகள் கலந்து கொண்டதாவும், அவர்களிடம் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் மனிதாபிமானத் துன்பத்தைத் தணிக்கவும், அசாத் ஆட்சியின் மூலம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிர்கட்சித் தலைவரான Jeremy Corbyn பாராளுமன்றத்தில் இது குறித்து ஓட்டு எடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்