யார் வேண்டுமானாலும் தீவிரவாதியாக இருக்கலாம்: இளவரசர் ஹரி திருமணத்தில் பலத்த பாதுகாப்பு

Report Print Balamanuvelan in பிரித்தானியா
199Shares
199Shares
ibctamil.com

இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்க நாங்கள் தயார் என்று பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

“பல்லாயிரக்கணக்கான மக்கள் இளவரசரின் திருமணத்தைக் காணக் கூடும் இடத்தில் அவர்களில் யார் வேண்டுமானாலும் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம்” என்று கூறும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான Bob Broadhurst, 2011 ஆம் ஆண்டு ஹரியின் அண்ணனான இளவரசர் வில்லியத்தின் திருமணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தவர்.

இளவரசரின் திருமணத்தைக் காண தெருக்களில் கூடும் பல்லாயிரக்கணக்கானோரில் யார் வேண்டுமானாலும் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம், அல்லது ராஜ குடும்பத்தின் தீவிர வெறியராக இருக்கலாம், ஏன் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பும் ஒரு நபராகக்கூட இருக்கலாம்.

அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வொருவரையும் சோதனை செய்வது இயலாத காரியம் என்று அவர் தெரிவித்தார்.

யார் வேண்டுமானாலும் ஒரு தீவிரவாதியாக இருக்கலாம் என்னும் பட்சத்தில் அவர்களை சோதனை செய்வது ஒரு பெரிய சவாலான காரியம்.

இளவரசர் ஹரியும் மெர்க்கலும் மே மாதம் 19 ஆம் திகதி மகாராணியின் வீடு இருக்கும் பகுதியான Windsor Castleஇல் அமைந்துள்ள St George’s Chapelஇல் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

வரும் வாரங்களில் வீடுகளில் வசிப்பவர்கள், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் உறவினர் வீடுகளுக்கு வருகை தருபவர்கள் என அனைவரும், ஆயுதம் தாங்கிய மற்றும் சாதாரண பொலிசார், பொலிஸ் நாய்கள், சாலைகள் மற்றும் ஹெலிகொப்டரில் ரோந்து வரும் பொலிசாரை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று அறிக்கை ஒன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கார் மற்றும் ரயில்களில் வருவோர் சோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள்.

ஆபத்தானது என்று சந்தேகிக்கப்படும் எந்தப் பொருளும் கைப்பற்றப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

திருமணம் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயம், அந்த நேரத்தில் ஒரு விழா மன நிலைமையிலிருப்பவர்களை ஏமாற்றமடையச் செய்யக்கூடாது.

அதனால் முடிந்தவரை அவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதபடி கவனமாக பாதுகாப்பு நடவடிகைகளை மேற்கொள்வது அவசியம்.

அதற்கு மேல் திருமணம் முடிந்ததும் திறந்த வாகனத்தில் புதுமணத் தம்பதியர் பவனி வர உள்ளனர். அதுதான் மிகவும் ரிஸ்கான நேரம்.

இளவரசரே அந்த அளவு ரிஸ்க் எடுக்கும்போது பொலிசாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறோம் என்று அதிகாரியான Bob Broadhurst கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்