பிரித்தானிய கடவுச்சீட்டு தயாரிக்கும் விவகாரம்: பிரான்ஸ் நிறுவனத்தின் சொதப்பல்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
143Shares

பிரித்தானியா கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் நிறுவனமான Gemalto ஏற்கனவே இன்னொரு நாட்டிற்கு தயாரித்த அடையாள அட்டைகளின் பாதுகாப்பு விடயங்களில் கோட்டை விட்டது தெரிய வந்துள்ளது.

பிரித்தானியா தனது புதிய நீல நிற பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதற்காக தேர்வு செய்துள்ள பிரான்ஸ் நிறுவனமான Gemalto ஏற்கனவே Estonia நாட்டிற்கு சுமார் 750,000 அடையாள அட்டைகள் தயாரித்து வழங்கியதில் பாதுகாப்பு விடயங்களில் தவறுகள் செய்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதனால் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் Gemalto நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பாஸ்போர்ட்டுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரித்தானிய பாஸ்போர்ட் தயாரிப்பு நிறுவனமான De La Rue தனது தரமும் பாதுகாப்பு அம்சங்களும் சிறப்பானவை எனவும், Gemaltoவுக்கும் தங்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு தங்கள் நிறுவனத் தயாரிப்பின் விலை அதிகம் என்பது மட்டுமே என்றும் கூறியுள்ளது.

ஆனால் Gemaltoவில் பாஸ்போர்ட் தயாரிப்பதால் 10 மில்லியன் பவுண்டுகள் மிச்சமாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய நீல நிற பாஸ்போர்ட்கள் பிரித்தானியாவில்தான் தயாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி 300,000க்கும் அதிகமான கையெழுத்துகள் பெறப்பட்ட மனு ஒன்று அரசிடம் அளிக்கப்பட உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்