மருத்துவமனையில் வைத்து திருமணம்: கண்கலங்க வைத்த நிகழ்வு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
227Shares

பிரித்தானியாவில் புற்றுநோயால் உயிருக்கு போராடும் காதலியை மருத்துவமனையில் வைத்து காதலன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை கண் கலங்க வைத்துள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடியிருக்கும் Mandy Helen Lucitt(57) மற்றும் Kevin McCarthy(62) ஆகிய இருவருமே மருத்துவமனையில் வைத்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

கடந்த 42 ஆண்டுகளாக செவெனோக்ஸ் பகுதியில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த இருவரையும் உலுக்கிய செய்தி Mandy இனி அதிக காலம் உயிருடன் இருக்க மாட்டார். அவருக்கு கணைய புற்றுநோய் ஆபத்து கட்டத்தில் உள்ளது என்பதே.

குறித்த செய்தியால் துவண்டு போன இருவரும் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்தனர். நீண்ட 42 ஆண்டுகள் திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திருமணம் செய்து கொள்வதாகவும் நாள் குறித்தனர். ஆனால் இதனிடையே Mandy-ன் நோய் தாக்கம் அதிகரிக்கவே திருமணத்தை உடனையே மருத்துவமனையில் வைத்து முடித்துக் கொள்ள முடிவு செய்தனர்.

இதனையடுத்து நெருங்கிய உறவினர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தனர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்கு திருமண மோதிரத்தை வாங்கியுள்ளனர். கெவின் தம்பதியரின் திருமணத்தை ஒட்டி, குறித்த மருத்துவமனையின் பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து செய்தியும் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 2100 பேர் குறித்த பேஸ்புக் பதிவுக்கு பதில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் செவெனோக்ஸ் பகுதியில் உள்ள தங்கள் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்