250 நிறுவனங்களின் குளிர்சாதன பெட்டிகளை வாங்க வேண்டாம்: என்ன காரணம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிளாஸ்டிக் பின் புறங்களைக் கொண்ட 250 நிறுவனங்களின் குளிர்சாதன பெட்டிகள் தீ விபத்துக்களை வேகப்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை வாங்க வேண்டாம் என்று பிரித்தானியாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலகம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அமைப்பு ஒன்று 500 பிரபல குளிர்சாதன பெட்டிகளையும், ஃப்ரீஸர்களையும் ஆய்வுக்குட்படுத்தியதில் 45 சதவிகிதமும் அவற்றின் பின் புறம் தரமற்ற தீ விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உடைய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளது.

இதற்காக அந்த அமைப்பு மேற்கொண்ட தீயைத் தாக்குப்பிடிக்கும் பரிசோதனையில் பிளாஸ்டிக் பின் பக்கங்களைக் கொண்ட குளிர்சாதன பெட்டிகள் 30 வினாடிகள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை, அதே நேரத்தில் உலோகம் அல்லது அலுமினிய பூச்சு கொண்ட குளிர்சாதன பெட்டிகள் தொடர்ந்து 5 நிமிடங்கள் தாக்குப் பிடித்தன.

பிளாஸ்டிக் பின் பக்கங்களைக் கொண்ட குளிர்சாதன பெட்டிகளையும், ஃப்ரீஸர்களையும் தயாரிப்பவர்களும் விற்பனையாளர்களும் அவற்றைக் கைவிடாவிட்டால் பிரித்தானியாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அலுவலகம் இந்த விடயத்தில் தலையிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தரக் கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

பிரித்தானியாவில் ஏற்படும் தீ விபத்துகளில் 8 சதவிகிதத்திற்கு குளிர்சாதன பெட்டிகள் மற்றும் ஃப்ரீஸர்கள் காரணமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்