பிரித்தானியாவில் திருடனை கத்தியால் குத்திய முதியவர் கைது: எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
435Shares

தென் கிழக்கு லண்டனைச் சேர்ந்தவர் Richard Osborn Brooks (78). நேற்றிரவு அவரும் அவரது மனைவியும் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரண்டு திருடர்கள்

வீட்டிற்குள் நுழைந்தார்கள்.அவர்களில் ஒருவன் Richardஐ ஒரு ஸ்க்ரூ டிரைவரைக் காட்டி மிரட்டி சமையலறைக்குள் தள்ளிக்கொண்டு போக அவர் அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்து தன்னை தப்புவித்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார்.

இருவருக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் திருடனின் மார்பில் கத்தி பாய்ந்தது.

அவன் தப்பி ஓட முயல, Richardஇன் மனைவியை மிரட்டிக் கொள்ளையடிக்க முயன்ற மற்றொருவன் அதைக்கண்டு பயந்து காயம் பட்டவனை இழுத்துக் கொண்டு ஓட முயன்றிருக்கிறான்.

காயம் பட்டவனால் ஓட முடியாமல் கீழே விழுந்துவிட மற்றவன் அவனை விட்டு விட்டு ஒரு வேனில் ஏறி தப்பியோடி விட்டான்.

சற்று நேரத்தில் கத்தியால் குத்தப்பட்டவனின் உயிர் பிரிந்த்து.

கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் Richard கைது செய்யப்பட்டார்.

இதற்கு அக்கம்பக்கத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வயதான ஓய்வு பெற்ற ஒரு மனிதர் தனது மனைவியையும் வீட்டையும் காப்பதற்காக இதை செய்துள்ளார்.

அவர் ஒரு மென்மையான மனிதர். யாருடனும் சத்தமாகக் கூட பேசுவதில்லை அவர்.

அவரது செய்கைக்காக அவருக்கு ஒரு மெடல் கொடுக்கப்பட வேண்டும், ஆனால் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சட்டம் நடந்ததைப் புரிந்து கொண்டு சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்