லண்டனை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்: இந்த ஆண்டில் மட்டும் 50 பேர் பலி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
464Shares

லண்டனில் உள்ள ஹேக்னி பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தலைநகர் லண்டன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 4 பேர் இதேபோன்று கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு 8 மணியளவில் ஹேக்னி பகுதியில் உள்ள லிங்க் தெருவில் பொலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது உடல் முழுவதும் கத்தியால் தாக்கப்பட்ட காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரை காப்பாற்றக் கோரி பொலிசாரை அணுகியுள்ளார்.

குற்றுயிராக கிடந்த அவரை மீட்ட பொலிசார் உடனடியாக அவசர சேவை மருத்துவக்குழுவுக்கு அழைப்பு விடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் குறித்த இளைஞருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் உடற்கூறு சோதனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் நடைபெறவில்லை. லண்டனை பொறுத்தமட்டில் கடந்த 48 மணி நேரத்தில் 4 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கத்தியால் தாக்குண்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50 என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் காலை வேளையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டதாகவும், டோட்டன்ஹாம் பகுதியில் 17 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்