பிரித்தானியாவில் பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் திருடிய கொள்ளையர்கள்: வீடியோ வெளியிட்ட பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் Greater Manchester பகுதியின் Ramsbottom-ல் உள்ள Santander வங்கியில் கடந்த செவ்வாய் கிழமை மாலை நேரத்தில் சங்கிலி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று முகமுடி கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பான வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளதுடன், அந்த நபர்கள் குறித்து தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த செவ்வாய் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி07.30 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது.

மோசமான ஆயுதங்களுடன் வந்த திருடர்கள் வங்கிக்கு பணம் கொண்டு வந்த காரை தாக்கி வாங்கிக்கு உள்ளே பணம் கொண்டு போகும் நேரத்தில் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இதில் சில வங்கி ஊழியர்களை அவர்கள் தாக்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சிறிய அளவிலான காயமே உள்ளது.

அந்த திருடர்கள் சிவப்பு நிற Ford Focus காரையே ஓட்டிச் சென்றுள்ளனர். திருடிச் சென்ற வேகத்தில் இதே பகுதியில் அந்த கார் வேறொரு காரின் மீது மோதியுள்ளது. அது குறித்து புகாரும் வந்துள்ளது.

ஆனால் அந்த திருடர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதால், அது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். அந்த வீடியோவை சம்பவம் நடந்த போது அருகில் இருந்த நபர் எடுத்துள்ளார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்