இவர்தான் இரண்டாவது டயானா: மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய இளவரசி

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மிக எளிமையாக ஒரு சாதாரண பெண்ணைப்போல மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த இளவரசி கேட்டைப் பார்த்து இன்ப அதிர்ச்சிக்குள்ளானார்கள் பொதுமக்கள்.

ஏற்கனவே குட்டி இளவரசர் ஜார்ஜை கேட் தனது காரில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பெரும்பாலானோர் பார்த்திருக்கிறார்கள் என்றாலும் பிரசவம் நெருங்கி வரும் நிலையிலும் அவர் எளிமையாக மளிகைக் கடையில் பொருட்களை வாங்கி தனது காரில் அடுக்கிக் கொண்டிருந்த காட்சி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அவரை தனது ஐபோனில் புகைப்படம் எடுத்த பெண், இளவரசி 25 சதவிகிதம் தள்ளுபடி என்று அச்சிடப்பட்ட கவரில் கொத்துமல்லியை வாங்கியதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து நின்றார்.

இளவரசியை புகைப்படம் எடுக்கும்முன் ஹலோ என்று அவர் கூற இளவரசியும் தனது டிரேட் மார்க் புன்னகையுடன் ஹாய், ஹலோ என்று கூறியதை ஜென்மத்திற்கும் மறக்கமாட்டார் அந்தப் பெண் என்றே தோன்றுகிறது.

“அது ஒரு அசாதாரணமான காட்சி, அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை இளவரசியே வந்து வாங்குகிறார் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று புளகாங்கிதத்துடன் கூறுகிறார் அந்தப் பெண்.

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் சொல்லலாம், இவர் இரண்டாம் டயானாவேதான், இல்லை இல்லை, இவர்தான் டயானா 2.0.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்