மதுபோதையால் சீரழிந்த பிரபல பிரித்தானிய நடிகை: தற்போது என்னவானார் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் மிகவும் பிரபலமடைந்த நடிகை Elaine Lordan.

ஒரே ஒரு தொலைக்காட்சி தொடரால் பிரித்தானியாவில் உச்சம் பெற்ற இவர், தனது மது பழக்கத்தால் புகழையும், செல்வாக்கையும் இழந்து உருத்தெரியாத அளவுக்கு தெருவீதியில் நின்று மதுவருந்தும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது 51 வயதாகும் இவர் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் புகழின் உச்சத்தில் இருந்தபோது மதுவுக்கு அடிமையாகி கடந்த 2003 ஆம் ஆண்டு அந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகை எலைனின் தாயார் Bernadette, எலைனின் மது பழக்கமே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். இதை அவர் புரிந்து கொண்டு, அந்த பழக்கத்தை கைவிட்டால் நன்று என்றார்.

இதனிடையே மதுவில் இருந்து விடுபடும் பொருட்டு ஒரு குழந்தைக்கு தாயானால் அனைத்தும் சரியாகிவிடும் என அவருக்கு அறிவுரை சொல்லப்பட்டது.

மட்டுமின்றி மருத்துவர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. அதில் கடின உழைப்பாளியான நடிகை எலைன், தொடர் படப்பிடிப்புகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகி படிப்படியாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானார் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் எலைனின் தாயார் லண்டனில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேவேளை, எலைனின் 9 மாத குழந்தை 5 வாரங்கள் முன்னராகவே பிறந்தது. மட்டுமின்றி அதன் முதல் பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

தாயாரின் தற்கொலை, ஆசையாக வளர்த்த முதல் குழந்தையின் மரணம் என தொடர் சம்பவங்கள், நடிகை எலைனை மீண்டும் மதுவுக்கு தள்ளியது.

தற்போது மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கும் நடிகை எலைன், லண்டன் தெருக்களின் நின்று சர்வசாதாரணமாக மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது வருந்ததக்கது என அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்