பிரித்தானியாவில் காணமல் போன இளம் பெண் ஆபத்தான நிலையில் இருக்கிறார்: பொலிசார் வேண்டுகோள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் காணம் போன பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொலிசார் கூறியுள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Ashleigh Fair. 19 வயதான இவர் Royal Berkshire மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளார்.

வெளியே சென்ற அவர் திரும்பி வராத காராணத்தினால் பொலிசார் அவரை தேடி வந்தனர்.

மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, காலை 9.30 மணிக்கு வெளியேறிய அவர் இரண்டு மணி நேரத்திற்கு பின் மீண்டும் அதாவது 11.37 மணிக்கு அதே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

தற்போது நிலவி வரும் கடுமையான பனிப் பொழில் காலில் ஷு போடாமல் திரிந்துள்ளார். உடனடியாக பொலிசார் அந்த பெண் தொடர்பான சிசிடிவி காட்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த வியாழன் அன்று காணமல் போன அந்த பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு உடனே சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அவரைப் பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்