பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியாவின் பொருளாதாரம் உயரும்: புதிய ஆய்வு முடிவுகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா வீழ்ச்சியடையும் என்பது தவறான கருத்து என்றும் அதற்கு மாறாக பிரித்தானியாவின் பொருளாதாரம் 4% வளர்ச்சியடையும் என்றும் Economists For Free Trade என்னும் அமைப்பு வெளியிட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஏற்கனவே அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் ஐரோப்பிய யூனியனை விட்டு பிரித்தானியா வெளியேறினால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் 2 முதல் 6 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்த கருத்துக் கணிப்பு, தடையற்ற வர்த்தகத்தின் பலன்களை கருத்தில் கொள்ளவில்லை என்று Economists For Free Trade தெரிவிக்கிறது.

Alternative Brexit Economic Analysis என்னும் இந்த புதிய ஆய்வு முடிவுகள் Roger Bootle, Gerard Lyons, Julian Jessop மற்றும் Professor Patrick Minford என்னும் நான்கு பொருளாதார வல்லுனர்களால் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்