தீவிரவாதத்தை தடுக்க பிரித்தானியாவின் புதிய மென்பொருள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தீவிரவாத வீடியோக்களை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் மென்பொருளை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மென்பொருளின்மூலம் தீவிரவாத வீடியோக்களைக் கண்டுபிடித்து, அதை யாரும் பார்க்காதபடி தடை செய்யலாம்.

ஆயிரக்கணக்கான மணிநேரம் ஓடும் IS தீவிரவாத வீடியோக்களை ஆய்வு செய்து எப்படி தீவிரவாத உள்ளடக்கத்தைக் கண்டுபிடிப்பது என இந்த மென்பொருளுக்கு “பயிற்சி” அளிக்கப்பட்டது.

லண்டனிலுள்ள ஒரு IT நிறுவனம் உருவாக்கிய இந்த மென்பொருளுக்காக அரசாங்கம் 6,00,000 பவுண்டுகளை வழங்கியது.

இந்த மென்பொருளால் 94% IS தீவிரவாத வீடியோக்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று ASI Data Science என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு வேளை ஒரு வீடியோவை தீவிரவாத வீடியோ என்று தவறாக முடிவு செய்ய வாய்ப்புள்ளதா என்றால், ஆம் அதற்கும் வாய்ப்புள்ளது, ஆனால் அது வெறும் 0.0055%தான்.

அதாவது ஒரு நாளைக்கு 5 மில்லியன் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டால், அதில் 250 தீவிரவாதம் தொடர்பற்ற வீடியோக்கள் தீவிரவாதம் தொடர்பானவை என தவறாக எச்சரிக்கப்படும்.

இந்த மென்பொருள், தீவிரவாதக் கருத்துகள் கொண்டவை என எச்சரிக்கும் எந்த வீடியோவையும் பார்ப்பதா இல்லையா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

Facebook மற்றும் Google, இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே தீவிரவாத உள்ளடக்கம், தங்கள் தளங்களில் இடுகையிடப்படுவதை தடுக்கக்கூடிய வசதியற்ற சிறிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத்தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உள்துறைச் செயலர் Amber Rudd, வருங்காலத்தில் இந்த மென்பொருளின் உபயோகம் கட்டாயமாக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

எப்படியாயினும் அடுத்து தீவிரவாதக் குழுக்கள் இணையத்தின் எந்தப்பகுதியை உபயோகப்படுத்தப் போகிறார்களோ என்ற அச்சம் நிலவத்தான் செய்கிறது.

2017ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை இதற்குமுன் தீவிரவாதப் பிரச்சாரங்களை மேற்கொள்ளாத 150 இணையதளங்களில் தீவிரவாத உள்ளடக்கம் வெளியானதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்