பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் திருமணம் முகூர்த்த நேரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி- மேகன் மெர்க்கல் திருமணம் மதியம் 12லிருந்து 1 மணிக்குள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 19-ஆம் திகதி ஹரி தனது காதலி மெர்க்கலை மணக்கவுள்ளார்.

இந்நிலையில் திருமண நிகழ்வுகள் குறித்த சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி, விண்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள St George's Chapel-ல் ஹரி - மெர்க்கல் திருமண சடங்குகள் மதியம் 12 மணிக்கு தொடங்கும்.

திருமணத்தை பேராயர் நடத்தி வைக்கவுள்ளார், 1 மணிக்குள் ஹரி- மெர்க்கல் திருமணம் முடிந்துவிடும்.

பின்னர் புதுமண தம்பதி வாகன ஊர்வலமாக விண்ட்ஸ்டர் நகரை சுற்றி வந்து மக்களை சந்திப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மீண்டும் St George's Chapel-லுக்கு வரும் தம்பதி அங்கு நடத்தப்படும் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் விருந்தினர்களுடன் கலந்து கொள்வார்கள்.

அன்று மாலை இளவரசர் சார்லஸ் தலைமையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பங்குபெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்