பிரித்தானியாவில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மான்செஸ்டர் நகரின் Openshaw பகுதியில் தனது நண்பர்களிடம் இருந்து பிரிந்து சென்ற நிலையில் சிறுமியை குறித்த நபர் பாலியல் ரீதியாக தாக்கியது தெரியவந்துள்ளது.

சிறுமி அதிர்ஷ்டவசமாக தப்பியதும் அந்த வழியாக சென்ற நபர் ஒருவரை சிறுமி உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ரோந்து பொலிசார் களத்தில் குதித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் 20 வயது ஆசிய நாட்டவர் எனவும், கருமை நிறத்தில் கோட் ஒன்றை சம்பவத்தின்போது அணிந்திருந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு நேர்ந்த துயரம் கவலை அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ள பொலிசார், இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் சிறுமிக்கு உதவி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையை அதிகப்படுத்தியுள்ளதாகவும், உதவி தேவைப்படும் பெற்றோர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்பு கொள்ளவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்