மகளைக் கொன்று நாடகமாடிய தந்தை: பொலிஸ் விசாரணையில் சிக்கியது எப்படி?

Report Print Harishan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 8 வயது மகளைக் கொன்று நாடகமாடிய தந்தை பொலிஸ் விசாரணையில் வசமாக சிக்கியுள்ளார்.

மேற்கு மிட்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வந்த வில்லியம் பில்லிங்கம் என்பரின் மகள் மில்(வயது 8) கடந்த ஜனவரி 20-ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை மீட்ட பொலிசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தந்தையான வில்லியம்(54) தன் மகளை கொன்றுவிட்டு தான் கொலை செய்யவில்லை என நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபரை கைது செய்துள்ள பொலிசார், நாளை 12-ஆம் திகதியன்று Wolverhampton நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்