லண்டன் வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியா முழுவதும் குளிர்ச்சியான வானிலை நிலவும் நிலையில் தலைநகர் லண்டனில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைநகரில் சனிக்கிழமை மழை பெய்த நிலையில், ஞாயிறு காலை முதல் குளிர்ந்த காற்று வீச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வெப்பமானது 6லிருந்து 7 டிகிரி செல்சியர்ஸ் வரை சனிக்கிழமை இருந்துள்ளது.

வானிலை ஆய்வாளர் லுக் மியல் கூறுகையில், ஞாயிறு காலை முழுவதும் குளிர்ந்த காற்றுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும்.

6 டிகிரி செல்சியர்ஸ் அளவில் ஞாயிறு வெப்பநிலை இருந்தாலும், அதிகளவிலான குளிர்ந்த காற்று காரணமாக 2 டிகிரி செல்சியர்ஸ் போன்ற உணர்வை கொடுக்கும் என கூறியுள்ளார்.

லண்டனில் பல இடங்களில் மழையோடு பனிப்பொழிவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிறும் அது தொடரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்