வாடிக்கையாளர் கண்களில் மிளகாய் பொடி வீசிய ஓட்டல் உரிமையாளர்: நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Harishan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வாடிக்கையாளர் கண்களில் மிளகாய் பொடி வீசிய ஓட்டல் உரிமையாளர் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தெற்கு வேல்ஸ் மாகாணத்தின் பிரின்ஸ் ஆஃப் பெங்கால் உணவகத்திற்கு கடந்த ஜனவரி 21-ஆம் திகதி இரவு உணவு உட்கொள்ள சென்றிருந்த டேவிட் என்பவருக்கும், உணவக உரிமையாளர் இஸ்லாமுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் வாடிக்கையாளர் கண்களில் ஓட்டல் உரிமையாளர் இஸ்லாம், மிளகாய் பொடி வீசிவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீதிபதி ரிச்சர்ட் ட்வோம்லோ முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

இதுகுறித்த அனைவரின் வாதமும் நிறைவுபெற்றுள்ள நிலையில், இறுதியாக இஸ்லாமின் வழக்கறிஞர் ரூத் ஸ்மித் வாதிடுகையில், டேவிட் கண்களில் மிளகாய் பொடி வீசப்பட்டது உண்மை தான். ஆனால், அவரது கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஒருவர் காயம் பட்டுவிட்டார் என்பதற்காகவே அவர் குற்றமற்றவர் என்று பொருள் அல்ல. குடித்துவிட்டு ஓட்டல் உரிமையாளரை மிரட்டியதில் தன்னை தற்காத்துக் கொள்ளவே அவர் மிளகாய் பொடி வீசியுள்ளார்.

அப்போது கூட அவர் கத்தியை கையில் எடுக்கவில்லை, திட்டமிட்டு இந்நிகழ்வை பெரிதுபடுத்துகின்றனர், ஆகவே உரிய தீர்ப்பை நீதிபதி வழங்கிட வேண்டும் என தன் வாதத்தை முடித்தார்.

அடுத்து பேசிய நீதிபதி ரிச்சர்ட் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட கம்ருள் இஸ்லாம் தன்னை தற்காத்துக் கொள்ளவே அந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரை விடுதலை செய்து இந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட கம்ருள் இஸ்லாம், ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்