வெறும் தலைவலி தான்: ஆனாலும் பரிதாபமாக உயிரிழந்த பெண்! நடந்தது என்ன?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்ணுக்கு ஏற்பட்ட Tuberculosis Meningitis சாதாரண ஒற்றை தலைவலி என மருத்துவமனை தவறாக கணித்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.

வேல்ஸின் பிரிட்ஜெண்ட் நகரை சேர்ந்தவர் சீமன் ஆபர்ஸ்டோன், இவர் மனைவி லிசா பீச்சே (39).

லிசாவுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தலைவலி, உடல் சோர்வு, கண்வலி என மூன்று பிரச்சனையும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து லிசாவை, சீமன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு லிசாவை பரிசோதித்து ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள், அவர் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதற்கான மருந்தை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

பின்னரும் லிசாவுக்கு அந்த பிரச்சனை தொடர்ந்த நிலையில் மீண்டும் வேல்ஸ் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அப்போது தான் அவருக்கு Tuberculosis Meningitis என்னும் நோய் இருப்பது தெரியவந்தது.

ஆனால் நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால் லிசா பரிதாபமாக அக்டோபர் 1-ஆம் திகதி உயிரிழந்தார்.

இதையடுத்து லிசாவில் நோயை சரியாக சொல்ல தவறிய மருத்துவமனை மீது சீமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பணத்தை கொடுத்து இந்த பிரச்சனையை சமூகமாக முடித்து கொள்ளலாம் என மருத்துவமனை தரப்பு சீமனை நாடியுள்ளது.

அவர் கூறுகையில், எனக்கு இன்னும் இந்த விடயத்தில் கோபம் குறையவில்லை, லிசாவின் நோயை சரியான சிகிச்சை மூலம் மருத்துவமனை கண்டுபிடித்திருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்திருப்பார்.

எல்லோரும் ஓடி சென்று உதவும் குணம் கொண்ட லிசாவை பிரிட்ஜெண்ட் நகரின் அன்னை தெரசா என்று தான் அழைப்போம் என சோகத்துடன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் Tuberculosis Meningitis நோயால் ஆண்டுக்கு 150லிருந்து 200 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்