வானில் இருந்து விழுந்த பனிக்கட்டி: பிரித்தானியாவில் சம்பவம்- வைரல் வீடியோ

Report Print Athavan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வானில் இருந்து திடீரென பனிக்கட்டி விழும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

லண்டனில் Kew Gardens ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த 7ம் திகதி காலை துப்புரவு பணியாளர் வேலை செய்து கொண்டிருந்த சமயம் திடீரென வானிலிருந்து பனிக்கட்டி விழுந்துள்ளது.

தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன பணியாளர் கூறுகையில், நான் சாலையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது அருகே பெரிய சத்தம் கேட்டது.

திரும்பி பார்க்கையில் வானில் இருந்து பனிக்கட்டி விழுந்து நொருங்கியிருந்தது, சுமார் 20 கிலோ எடையுள்ள இந்த பனிக்கட்டி யார் மீதேனும் விழுந்திருந்தால் அவர்கள் உயிர் பிழைப்பது சந்தேகம் தான் என தெரிவித்துள்ளார்.

வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இந்த பனிக்கட்டி விழுந்திருக்கலாம் என அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

Heathrow விமானநிலையத்தின் வான்பாதை இந்த பகுதிக்கு அருகில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் விமானங்களில் இருந்து ஆண்டு தோறும் இதுபோல 30 பனிக்கட்டி விழுந்து விபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

விமானங்களில் இருந்து கசிவுகள் ஏற்படுவதாலும் அல்லது வானின் உயரத்தில் உள்ள பனியில் விமானத்தின் வெப்பமான காற்று படுவதால் வானில் இருந்து பனிக்கட்டியாக நிலத்தில் விழுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவில் ஏவியேஷன் அதிகாரிகள், விமானத்தில் இருந்து ஐஸ்கட்டிகள் விழும் நிகழ்வை பற்றி விசாரணை செய்ய முடியாது என்ற போதிலும் இந்நிகழ்வை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்