பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாகிறதா பிரித்தானியா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியா மற்றும் வேல்ஸ் பகுதிகளில் 5 பெண்களில் ஒருவர் பாலியல் அச்சுறுத்தலுக்கு இரையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் ஒட்டுமொத்தமாக சுமார் 3 மில்லியன் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

பலாத்காரம், அருவருக்கத்தக்க நடத்தை மற்றும் தொடுதல் என பல்வேறு தொல்லைகளுக்கு பெண்கள் அனுதினம் இரையாவதாக குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆண், பெண் இருபாலரும் தங்களின் 16 வயது பருவத்தில் இருந்தே குறித்த பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளனர்.

பெண்களை பொறுத்தமட்டில் இது 20 விழுக்காடு எனவும் ஆண்கள் 4 விழுக்காடு எனவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் 3.4 மில்லியன் எனவும், ஆண்களில் 631,000 பேர் எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பெரும்பாலும் மதுபோதையில் இருக்கும் நபர்களாலையே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சுமார் 38 விழுக்காடு பேர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதே அளவிலான எண்ணிக்கையில், தாங்கள் மது போதையில் இருந்த நிலையில் துஷ்பிரயோகத்திற்கு இரையானதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்