பிறக்கும் போதே வளர்ந்த பற்களுடன் பிறந்த ஆச்சரிய குழந்தை

Report Print Athavan in பிரித்தானியா

இங்கிலாந்தில் Cruise Horsburgh என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை பிறக்கும் போதே பற்களுடன் பிறந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Cruise எனும் இந்த குழந்தை Newcastleல் உள்ள Royal Victoria மருத்துவமனையில் January 27ம் திகதி பிறந்தது.

குழந்தையின் தாய் Shannon MacAllister கூறும் போது, இது உண்மையில் விசித்திரமான நிகழ்வு நான் மட்டும் அல்ல எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரும் என் குழந்தையின் பல்லை பார்த்து வியந்து போனார்.

தினமும் என் குழந்தையின் பல்லை பார்க்க நிறைய பேர் வருகிறார்கள், அவர்கள் அனைவரும் பார்த்த பின்னர் ஆச்சரியமான மனநிலைக்கு போவதை என்னால் காணமுடிகிறது என தெரிவித்துள்ளார்.

பொதுவாக அனைத்து குழந்தைகளுக்கும் 6 மாதம் கழிந்த பின்னரே பற்கள் வளர தொடங்கும், சில குழந்தைகளுக்கு 4 மாதத்திற்கு பின்னரும் பற்கள் வளரும்.

ஆனால் 2000- 3000 குழந்தைக்கு ஒரு குழந்தை தான் Cruise போல் பற்களோடு பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்