இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் அக்கா: திருமண கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா?

Report Print Athavan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் திருமணம் இந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்ததில் இருந்து விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் பலரும் அறிந்திராதவரான Laura Lopes என்பவர் ஹரி மற்றும் மேகன் திருமணத்தில் பங்கேற்பாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

40 வயதாகும் Laura இளவரசி கமிலா மற்றும் ஆன்ரு பவுலர் எனும் பிரிட்டன் ராணுவ அதிகாரிக்கு மகளாக பிறந்தவர்.

பிரித்தானிய இளவரசர்களின் தாய் டயானா மறைந்த உடன் சார்லஸை இரண்டாம் முறையாக மணந்ததை அடுத்து Laura Lopes வில்லியம்ஸ் மற்றும் ஹரி ஆகியோருக்கு அக்கா உறவு முறை ஆனார்.

மேலே உள்ள படத்தில் வலது பக்கம் கடைசியாக பச்சை நிற உடையில் இருப்பவர் தான் Laura Lopes.

Laura Lopes மகள் Eliza சார்லஸ் கையில் இருக்கும் குழந்தை

ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் Laura Lopes சாதாரண வாழ்க்கை முறையே விரும்பி ஏற்றுக்கொண்டவர்.

இவர் 2006 ஆம் ஆண்டு Harry Lopes என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு Eliza எனும் 10 வயது மகள் உள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்