மரணத்தின் தருவாயில் இளம்பெண்: நெஞ்சை உருக்கும் இறுதி நாட்களின் புகைப்படங்கள்

Report Print Harishan in பிரித்தானியா

பிரித்தானியாவில் புற்றுநோய் பாதித்த இளம் பெண் ஒருவர் தன் இறுதி நாட்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு மிட்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் எமி ரெட்ஹெட்(வயது 28) என்னும் இளம் பெண், சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனையின் போது, அவருக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

மிகவும் முதிர்ந்த நிலையில் அந்த நோய் அறியப்பட்டதால், எமியின் கல்லீரல் உள்ளிட்ட பகுதிகளும் புற்றுநோயால் பாதிப்படைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மனம் தளராத எமி, தனக்கு வந்த நிலை மற்ற யாருக்கும் வந்துவிடக்கூடது என்ற நோக்கத்துடன் சமூக வலைதளம் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து எமியின் சகோதரி எமிலி(வயது 22) கூறுகையில், என் அக்கா அவரின் உடல் தோற்றத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

தொடர்ச்சியாக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருந்த அவருக்கு இப்படி ஒரு கொடிய நோய் வரும் என நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை.

இந்த நோயின் கொடூரத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தற்போது அவளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எமி, தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்