லண்டனில் அசத்திய இந்தியா வம்சாவளி சிறுவன்: என்னால் அழாமல் இருக்க முடியவில்லை என பேட்டி

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் நடைபெற்ற மென்ஸா ஐ.கியூ போட்டிக்கான நுழைவுத்தேர்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் புதிய சாதனை படைத்துள்ளான்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் மனிதர்களின் பொது அறிவுத் திறனை மதிப்பிடும் ஐ.கியூ போட்டிக்கான பொது அறிவுத் திறன் நுழைவுத் தேர்வு போட்டி நடைபெற்றது.

இந்த நுழைவுத் தேர்வில், வோக்கிங்ஹாம் பகுதியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி தம்பதியரான கவுரவ் கார்க் - திவ்யா கார்க்கின் இளைய மகன் மெஹுல் கார்க்(10) பங்கேற்றான்.

இந்த போட்டியில் மெஹுல் கார்க் 162 மதிப்பெண்கள் பெற்றதுடன் மிகவும் குறைந்த வயதில் இதில் பங்கேற்றவன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளான்.

இது குறித்து சிறுவன் கூறுகையில், அதிக மதிப்பெண்கள் கிடைத்திருந்ததைப் பார்த்து என்னால் அழாமல் இருக்க முடியவில்லை, இறுதிச்சுற்றுகான 100 பேர் பட்டியலில் நிச்சயமாக நான் இடம்பெறுவான் என்று கூறியுள்ளார்.


மேலும் இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஐ.கியூ போட்டிக்கான பொது அறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த துருவ் கார்க்(13) என்ற சிறுவன் அசத்தலாக பதில் அளித்து 162 மதிப்பெண்களை பெற்று, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அறிவுத்திறன் பெற்றவன் என்ற சாதனையை படைத்திருந்தார்.

அவரின் தம்பி தான் மெஹுல் கார்க், தற்போது ஐ.கியூ போட்டிக்கான பொது அறிவுத் திறன் போட்டியில் பங்கேற்பதற்கான நுழைவுத் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்