உடல் நலமற்ற பெண்ணை தாக்கும் காட்சி: கையும் களவுமாக சிக்கிய பொறுப்பாளர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் Dimentia என்னும் மூளை சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள வயது முதிர்ந்த பெண்ணை கவனித்துக்கொள்ளும்படி வேலைக்கு அமர்த்தப்பட்ட உதவியாளர் யாரும் வீட்டில் இல்லாதபோது அவரைத் தாக்கியுள்ளார்.

Gina Owen என்பவர், தனது தாயான Sabina Marsden(78)- யை கவனித்துக்கொள்வதற்காக Stacey George என்னும் பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.

வீட்டில் அனைவரும் வேலைக்கு செல்வதால், தாயைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத நிலையில் Stacey George வேலைக்கு அமர்த்தப்பட்டார்.

நாளுக்கு நாள் தனது தாயின் உடல் நலம் குறைந்து கொண்டே வருவதைக் கவனித்த Gina Owenக்கு Stacey George மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அவர் வீட்டில் ஒரு ரகசியக் கமெராவை மறைத்து வைத்து அதைத் தனது மொபைல் போனுடன் இணைத்தார். இந்நிலையில் ஒரு நாள் தனது போனைக் கவனித்த அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.

Stacey George, தனது தாயை அடிப்பதையும், உன் மேல் நாற்றம் அடிக்கிறது என்று திட்டுவதையும், அவரது போர்வையை பிடுங்குவதையும் பார்த்த, அவர் உடனடியாக அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு ஓடி வந்தார்.

ஓடிச்சென்று தனது தாயைக் கட்டி அணைத்துக் கொண்ட அவர் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, Stacey Georgeஇடம் நான் எல்லாவற்றையும் ரகசிய கமெரா மூலம் பார்த்து விட்டேன், தயவு செய்து வெளியே போய் விடு என்று விரட்டியுள்ளார்.

இது குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் இன்னும் எத்தனை முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களோ தெரியவில்லை, ஒரு வேளை அவர்கள் பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கலாம் என்று Gina Owen கூறுகிறார்.

இந்த சம்பவத்தில் ருசிகரமான தகவல் என்னவென்றால், Stacey Georgeஐ வேலையை விட்டு அனுப்பிய பிறகு Gina Owenவின் தாயாரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என்பதுதான்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்