பிரித்தானியாவில் கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞன்: உயிருக்கு போராடும் பரிதாபம்

Report Print Santhan in பிரித்தானியா
1271Shares

பிரித்தானியாவில் இளைஞன் ஒருவனை அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.

பிரித்தானியாவின் Derby பகுதியில் உள்ள Normanton சாலையில் கடந்த 5-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணி அளவில் 19 வயது இளைஞன் சாலையை கடக்க முற்பட்ட போது, அதிவேகமாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது மோதியதால், அவர் தூக்கி வீசப்பட்டார்.

ஆனால் விபத்தை ஏற்படுத்திய அந்த கார் ஓட்டுனர், காரை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளார். அதன் பின் தூக்கி வீசப்பட்ட அந்த நபரை, அங்கிருந்த நபர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், அது தொடர்பான வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய கார் Audi A3 வகையைச் சேர்ந்தது எனவும் காரின் பம்பர் மற்றும் முன் பக்க கண்ணாடி உடைந்திருக்கும் என்பதால் இது தொடர்பான தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர்.

விபத்தில் சிக்கிய இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்