தவறுதலாக டீயை மேலே கொட்டிக்கொண்ட குழந்தை: பள்ளிக்கு அபராதம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
138Shares

ஆசிரியைக்கு கொண்டுவந்த டீயை ஒரு மாணவன் தவறுதலாக மேலே கொட்டிக்கொண்டதில் அவனது கை முழுவதும் வெந்துபோனது.

Bournemouth இல் உள்ள Chapel Day Nursery யில் Oakley Hallam-Baker என்ற 2 வயதுக் குழந்தை பயின்று வந்தான்.

ஆசிரியை குடிப்பதற்காக கொண்டுவரப்பட்ட டீயை அவன் தவறுதலாக தன் மீது கொட்டிக்கொண்டான்.

அது ஆறிப்போன டீ என்று சொல்லப்பட்டதால் அவன் மீது சரியான கவனம் செலுத்தப்படவில்லை.

பிள்ளையைப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துப்போக அவனது தாய் Tracey Hallam-Baker வந்தபோது, அவன் கை வெந்து போயிருப்பதைப் பார்த்து துடித்துப்போய் ஆம்புலன்சை வரவழைத்தார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தையின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர்.

குழந்தையை போர்வையால் மூடி வைத்திருந்ததைக் கண்ட அவர்கள் உடனடியாக பள்ளியின் மீது வழக்குத்தொடரும்படி குழந்தையின் தாயிடம் கூறினர்.

Third-degree burns என்று அழைக்கப்படும் அளவிற்கு மோசமான நிலையில் குழந்தையின் கை வெந்து போயிருந்தது.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி இந்த சம்பவம் நடைபெற்றது.

கடந்த வாரம் Bournemouth மற்றும் Poole County நீதிமன்றம் சிறுவனுக்கு 4300 பவுண்டுகள் நஷ்ட ஈடு வழங்கும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. பள்ளி நிர்வாகமும் இந்தத் தொகையை செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்