நிர்வாண புகைப்படம்: விசாரணை வளையத்தில் 200 பிரித்தானிய சிறுவர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
194Shares

பிரித்தானியாவில் சமூக வலைதள பயன்பாட்டாளர்களுடன் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட 200 சிறுவர்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் சக மாணவர்கள் மற்றும் சமூக வலைதள பயன்பாட்டாளர்களுடன் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டது தொடர்பாக ஆரம்ப பள்ளி மாணவர்கள் 200 பேர் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளாக குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட சிறுவர்களின் வயது 12 வயதுக்கும் குறைவு எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 2014 முதல் 2017 ஏபரல் வரையான காலகட்டத்தில் இதே குற்றச்சாட்டில் தொடர்புடைய சுமார் 5,000 சிறுவர்கள் பொலிசாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பிரித்தானியாவில் நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சிறுவர்கள் அனைவரின் பெயர் உள்ளிட்ட முகவரிகள் பொலிசாரிடம் உள்ளது எனவும், ஆனால் குறித்த தகவல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய சிறுவர்களின் பெற்றோருக்கும் இந்த தகவலானது பொலிசாரால் இதுவரை பகிரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட வேலை வாய்ப்புக்கு தொடர்புடைய சிறுவர்கள் அணுகும்போது அது அவர்களுக்கு சிக்கலாக அமையும் எனவும்,

இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் மட்டும் 18 வயதுக்கு உட்பட்ட 63 பேர் மீது தங்கள் ஸ்மார்ட் போன் வழியாக நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக கூறி பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் 11 வயது சிறுவர்கள் 105 பேரை பொலிசார் இதுவரை விசாரித்துள்ளனர்.

12 வயது சிறுவர்கள் 327 பேர் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்