எட்டு வயது மகளைக் கொல்லும் முன் பீட்சா வாங்கிக் கொடுத்த தந்தை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1259Shares

பிரித்தானியாவின் Brownhills பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது Bill Billingham. தனது பிள்ளைகளின் புகைப்படங்களை Facebookஇல் அவ்வப்போது வெளியிடுவது அவரது வழக்கம்.

தனது 8 வயது மகள் பீட்சா சாப்பிடும் புகைப்படம் ஒன்றை நேற்றிரவு வெளியிட்டார். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து வாழும் அவரது மனைவி, சாலையில் நின்று தனது மகள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூச்சலிட்டார்.

விரைந்து வந்த பொலிசார் Mylee Billingham என்னும் அந்த எட்டு வயதுச் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவள் உயிரிழந்தாள்.

கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் சிறுமியின் தந்தையின் உடலிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் Bill Billingham வேலையிழந்ததாகக் கூறப்படுகிறது. பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Bill Billinghamஇன் சகோதரரான Mark Billingham, Brad Pitt, Angelina Jolie மற்றும்Tom Cruise ஆகியோரின் தனிப்பட்ட பாதுகாவலராகப் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்