புகைப்படக்காரர்களின் தொந்தரவு: பிரித்தானிய இளவரசி எடுத்த முடிவு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
662Shares

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தனது மூன்றவாது குழந்தையை வீட்டிலேயே வைத்து பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியினருக்கு இரணடு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது கேட் மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

இவருக்கு, வரும் ஏப்ரல் மாதம் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மூன்றாவது குழந்தையை Kensington அரண்மனையில் வைத்து பெற்றெடுத்துக்கொள்ள கேட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு, வில்லியமும் அனுமதி அளித்துள்ளார், ஏனெனில், இவர்களது முதல் இரண்டு குழந்தைகளும், London's St Mary's மருத்துவமனையில் பிறந்தனர். அப்போது, மருத்துவமனை முன்பாக 7 நாட்களாக பத்திரிகையாளர்களும், புகைப்படக்கலைஞர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

இது மிகவும் இடையூறாக இருந்தது, இதுபோன்று, மீண்டும் நடக்ககூடாது என்பதால், வீட்டிலேயே குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்