பிரித்தானியாவில் 8 வயது சிறுமி குத்தி கொலை: கத்திக் கொண்டே ஓடிய தாய்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் குடும்ப பிரச்சனை காரணமாக 8 வயது சிறுமி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள Walsall-ன் அருகில் இருக்கும் Brownhills இடத்தில் உள்ள வீட்டில் 8 வயது சிறுமி ஒருவர் இரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொலிசார், குறித்த பகுதிக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிறுமி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், இறந்த சிறுமியின் பெயர் Mylee Billingham(8) எனவும், இவரது தந்தையின் பெயர் Bill Billingham(54) தாயின் பெயர் Tracey Taundry எனவும் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார், அவரை உடனடியாக மருத்துவனையில் அனுமதித்தோம், இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

அதே சமயம் சிறுமியின் தந்தையும் வயிற்றில் குத்தப்பட்ட நிலையில், இரத்தக் காயங்களுடன் இருந்தார், அவரையும் மருத்துவனையில் அனுமதித்துள்ளோம், சிறுமியை அவர் தான் கொலை செய்திருக்க கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் சம்பவ தினத்தன்று சிறுமியின் தாயார் என் மகளை குத்திக் கொண்டிருக்கிறார் என்று கத்திய படி ஓடியதாக, அருகில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

இதனால் குடும்பப் பிரச்சனை காரணமாக சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது, இதன் காரணமாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளோம், அதுமட்டுமின்றி, சிறுமி இறப்பதற்கு சற்று நிமிடத்திற்கு முன்னர் தான், சிறுமியின் அங்கிருந்து ஓடியுள்ளார்.

அவரையும் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்