பிரித்தானிய இளவரசர் வில்லியம் தலைமுடி வெட்ட இவ்வளவா செலவழித்தார்?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம் சமீபத்தில் தலைமுடி வெட்ட £180 செலவு செய்தார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது தவறான தகவல் என தெரியவந்துள்ளது.

இளவரசர் வில்லியம் கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

அப்போது புதுவித சிகை அலங்காரத்துடன் அவர் காட்சியளித்தார். இதற்கு வில்லியம் £180 செலவு செய்தார் என தகவல் வெளியானது.

அதே நேரத்தில் வழுக்கை விழுந்த வில்லியமுக்கு குறைந்த அளவிலான தலைமுடியே உள்ளதால் அதற்கு இந்தளவு பணம் செலவாகுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

ஆனால் முடிவெட்ட £180 செலவானது என்ற தகவல் கேட்டு வில்லியமே சிரித்துள்ளார் என கூறப்படுகிறது.

குறைந்த அளவில் தலைமுடி இருக்கும் தனக்கு இவ்வளவு செலவாகுமா என அவர் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் வீட்டில் தனது முடியை தானே வெட்டி கொள்ளும் பழக்கமும் வில்லியமுக்கு இருக்கிறது.

தலைமுடி அதிகளவு உதிர்வதால் சிகை அலங்கார நிபுணரிடம் இது குறித்து வில்லியம் ஆலோசனை கேட்டுவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்