பிரிந்து சென்றாலும் மீண்டும் பிரித்தானியா இணையலாம்: எப்படி தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா பிரிந்து சென்ற பிறகும்அந்தக் கூட்டமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டால் அதில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விவகாரத் துறை அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி ஐரோப்பிய யூனியன் கோரினாலும், அந்த முடிவிலிருந்து பின்வாங்குவது குறித்த பேச்சுக்கே இடமில்லை.

இதுதொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் மக்கள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முடிவை மாற்ற முடியாது.

இருந்த போதிலும் எதிர்காலத்தில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரித்தானியா மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், ஐரோப்பிய யூனியன் தற்போதுள்ள கட்டமைப்பு தொடர்ந்தால், அந்த அமைப்புடன் பிரித்தானியா இணைய முடியாது.

அதுவே அதில் சில ஆக்கப் பூர்வமான மாற்றங்கள் கொண்டு வந்தால், அந்த கூட்டமைப்பில் பிரித்தானியா இணையலாம் என்று பிரித்தானியாவின் கேபினட் விவகாரத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அந்தக் கூட்டமைப்பில் பிரிட்டன் இணையலாம் என்றார் அவர்.

மேலும் ஐரோப்பிய யூனியனிலிருந்து 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேற பிரித்தானியா முடிவு செய்துள்ளது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்