22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரேசில் நாட்டிலுள்ள Rio de Janeiroவின் Barra da Tijuca பகுதியிலுள்ள கடற்கரையில் மன்னர் ஒருவர் வசித்து வருகிறார்.

ஆம், 44 வயதான Marcio Mizael Matolias தான் அந்த மன்னர்.

இந்த மன்னருக்கு இருப்பதெல்லாம் ஒரே ஒரு மணல் கோட்டையும், சில புத்தகங்களும்தான்.

Marcio மணல் சிற்பங்கள் செய்வதில் புகழ்பெற்றவர். சிறுவயதிலிருந்தே கடற்கரையிலேயே வாழ்ந்து விட்டவருக்கு வேறு இடத்திற்குப் போக மனமில்லை. கடற்கரையருகே உள்ள வீடுகளின் வாடகையோ எக்கச்சக்கம்.

ஆகவே அவரே தனக்கான அரண்மனையைக் கட்ட முடிவு செய்தார். இருக்கவே இருக்கிறது அவரது மணல் சிற்பங்கள் செய்யும் திறன். அழகான மணல் அரண்மனை ஒன்றைக் கட்டினார்.

இப்போது 22 ஆண்டுகளாகிறது. Marcio இன்னும் அதே மணல் அரண்மனையில்தான் வசித்து வருகிறார்.

இடிந்து விழாமல் இருப்பதற்காக அவ்வப்போது அரண்மனையின்மீது தண்ணீர் தெளித்துக் கொள்கிறார்.

அக்கம்பக்கத்தோர் அவரை “மன்னர்” என்றுதான் அழைக்கிறார்கள்.

இந்த மணல் கோட்டை மன்னரைக் காண பலர் வருகிறார்கள், வந்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

தலையில் கிரீடமும் கையில் செங்கோலும் வைத்திருக்கும் இந்த மன்னருக்கு ஒரே ஒரு பிரச்சினைதான். வெயில் காலத்தில் அரண்மனைக்குள் வெப்பம் அதிகமாக இருப்பதுதான் அது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்