டிராபிக்கில் மாட்டிக்கொண்ட இளவரசி கேட்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற பிரித்தானிய இளவரசி கேட் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

அவரது Range Rover கார், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி காண்போரின் புருவங்களை ஆச்சரியத்தில் உயர வைத்துள்ளன.

தனது பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளைப் போலவே வளர வேண்டும், கல்வி கற்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளவரசி, குட்டி இளவரசர் ஜார்ஜை தனது அரண்மனையிலிருந்து 3.6 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பள்ளியில் படிக்க வைக்கிறார்.

அவரைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோதுதான் இளவரசி கேட் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார்.

போக்குவரத்து இலகுவாகும் வரையில் பொறுமையுடன் காத்திருந்த கேட் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இளவரசி கேட் கர்ப்பமாக இருப்பதும், இந்த நிலையிலும் சில நாட்களுக்குமுன் பள்ளியொன்றிற்கு சென்றிருந்த அவர் பள்ளிக் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்